ரணில் போட்டியிட்டால் சஜித் யால காட்டுக்கு சென்றுவிடுவார்
ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டால் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச போட்டியிட மாட்டார் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
டலஸ் அல்லது மைத்திரிபால அல்லது அநுர திசாநாயக்க அல்லது ஒருவரைத் தள்ளிவிட்டு சஜித் பிரேமதாச அணி இந்த ஜனாதிபதித் தேர்தலை தவிர்க்கும் என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டால் சஜித் பிரேமதாச நிச்சயமாக யால காட்டு பகுதிக்கு சென்றுவிடுவார். எனத் தெரிவித்த ரங்கே பண்டார, இப்போது யால காட்டில் நுளம்புகளை விரட்டி உண்ணிகளை அடிக்க வேண்டிய அவசியமில்லை எனவும் தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்த இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அரசியல் மேனியா சின்ரோம் களின் பல வடிவங்களை இனி தொடர்ந்து பொது மக்களுக்குக் கேட்க முடியுமாகும். இவர்கள் அனைவருக்கும் தனியான ஒரு மனநோய் வைத்தியசாலை அங்கொடயில் உடனடியாக கட்டப்பட வேண்டும். இல்லாவிட்டால இந்த நோய்களால் கடைசியில் பொதுகமக்களையும் அதிக அளவில் பாதிக்கும்.
ReplyDelete