பொதுஜன பெரமுனவுக்கு சவால் விடுத்துள்ள நிமல் லான்ஸா
அதிகார பகிர்வு தொடர்பாக பொதுஜன முன்னனி இருவேறு நிலைபாட்டை கடைபிடிப்பதாக பாராளுமன்றத்தில் சுயிதீனமாக இயங்கும் பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா ஊடகங்களுக்கு விடுத்துள்ள விசேட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அவ்அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரசியலமைப்பின் 13 வது திருத்தத்தை அமுல்படுத்தி நாட்டு மக்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வேலைத்திட்டத்தை தயாரிக்கும் போது அதற்கு எதிர்பு தெரிவிக்க பொதுஜன முன்னணிக்கு எந்த உரிமையும் இல்லை.
13 க்கு அப்பாற்பட்ட தீர்வை காணபதே பொதுஜன முன்னணியின் தலைவரும் முன்னால் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷவின் கருத்தாக இருந்தது. 13 வது திருத்தச்சட்டம் தற்போதும் அரசியலமைப்பின் உள்ளடக்கமாகவுள்ளதுடன், அதனை சகல மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அதிகாரம் பகிர்வுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சகல கட்சிகளினதும் கருத்தை பெற்று நடைமுறைப்படுத்த முனையும் போது பொதுஜன முன்னணியின் செயலாளர் சாகர காரியவசம் அதற்கு எதிராக கருத்துத் தெரிவிப்பது அவர்களின் இரட்டை நிலைபாட்டை நாட்டுக்கு காட்சிப்படுத்துவதாகும்.
நிலையான பொருளாதாரம் மற்றும் ஒருமைப்பாட்டை கட்டியெழுப்ப நாட்டின் சகல இன மக்களிடையேயும் சமாதானம் நல்லிணக்கம் ஏற்படுத்தப்பட வேண்டும்.
சகல இனக் குழுகள் இடையேயும் நம்பிக்கையை ஏற்படுத்த சகலருக்கு ஏற்றுக்கொள்ள கூடிய அதிகாரம் பகிர்வு தேவை. அதன் மூலம் சகல இனங்களும் இந்த நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு பங்குதாரர்களாக ஆக்கிக்கொள்ள முடியும். அப்போது சகலரும் இலங்கையர் என்ற உணர்வு கட்டியெழுப்பப்படும். சர்வதேச நம்பிக்கையையும் பெற்றுக்கொள்ள முடியும்.
இது தொடர்பாக அற்ப தெளிவும் இல்லாமல் பொதுஜன முன்னணி தலைவர் மஹிந்த ராஜபக்சவின் கருத்துக்கும்,பொதுஜன முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தும் மணட்சாட்சிக்கு இனங்க வேலைசெய்யும் பெறும்பான்மாயான மந்திரிகளின் கருத்துக்களுக்கும் மாற்றமான கருத்தை செயலாளர் வெளிப்படுத்துவது எந்த நோக்கத்தில் என்பதை தெளிவு படுத்த வேண்டும்.
நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு பொதுஜன முன்னணியால் ஒருவர் நிறுத்தப்படுவதாக அக் கட்சின் சிலர் பல்வேறு கருத்துக்களை கூறியுள்ளனர். முடியுமாக இருந்தால் யார் அந்த அபேட்சகர் என்பதை நேரடியாக நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும்.
பொதுஜன முன்னணி ஜனாதபதி தேர்தலுக்கு அபேட்சகர் ஒருவரை நிறுத்துவதாகவும் அதற்காக மூன்று எழுத்தைக் கொண்ட பெயருள்ள தலைவர் நிறுத்தப்படுவார் என பல கருத்துக்களை கூறி மக்களை ஏமாற்றுவது கட்சிக்குள் பொதுவான உடன்பாடு இல்லாததினாலாகும்.
முடியுமாகவிருந்தால் சகல தரப்பினரினதும் உடன்பாட்டுடன் ஜனாதபதி வேட்பாளர் யார் என்பதை வெளிப்படுத்த வேண்டும்.
ஏற்படுத்தப்பட்ட மோதலிலிருந்து நாட்டை மீண்டும் கட்டியெழுப்பி சமூக, பொருளாதாரம் அரசியல் ஸ்தீரத்தன்மையை ஏற்படுத்தித்தந்த ரணில் விக்ரமசிங்கவின் வேலைதிட்டத்தை பொதுஜன முன்னணியின் மக்கள் ஆணை இல்லாத ஒருசிலருக்கு இன்று மறந்துபோயுள்ளன.
மீண்டும் அரசியல் செய்வதற்கு தேவையான ஜனநாயக சூழலை உறுவாக்கித்தந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமைத்துவத்தை மறக்கும் கட்சியின் ஒருசிலரின் செயல்பாடு கவலைக்குரியது.
நாட்டின் ஏற்பட்ட ஸ்தீரதன்மையற்ற நிலை மற்றும் மோதலுக்கு தீர்வாக நாட்டை கட்டியெழுப்பக்கூடிய ஒரே தலைமைத்துவம் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க என்பதே பொதுஜன முன்னணியின் தெரிவாகவிருந்தது.
அந்த நிலையில் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார முட்டுக்கட்டையை நீக்கி சர்வதேச உதவியுடன் நாட்டை மீண்டு கட்டியெழுப்பிய ரணில் விக்ரமசிங்க தொடர்பாக மக்களிடம் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
பொதுஜன முன்னணியின் பெறும்பாலாவர்கள் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவை வெற்றிபெறச்செய்வார்கள் என்றும், மக்கள் ஆணையில்லாத மக்களின் உணர்வுகளை அறியாத சிறு தொகையினரின் கருத்தை நாட்டு மக்கள் நிராகரிப்பார்கள் என தெரிவித்துள்ளார்.
Post a Comment