பௌத்த பிக்குவின் விசித்திரமான கோரிக்கை
கையடக்கத்தொலைபேசிக்கு ஒரு இலட்சம் ரூபா வரி விதிக்கப்பட வேண்டுமென தினியாவல பாலித தேரர் முன்மொழிந்துள்ளார்.
நிகழ்வொன்றில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,
இன்றைய சமூக வீழ்ச்சிக்கு கையடக்கத்தொலைபேசிகளே முக்கிய காரணம்.
இன்று பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையிலான உறவும், கணவன் மனைவி உறவும் தொலைந்தும், சமூகத்துடனான உறவும் இல்லாமல் போய்விட்டது.
திருட்டு, குற்றம், பலாத்காரம் மற்றும் போதைப்பொருள் கடத்தல் அனைத்தும் இந்த கையடக்கத்தொலைபேசி மூலம் எளிதாக்கப்படுகிறது.
முடிந்தால் கையடக்கத்தொலைபேசிகளை அகற்றவும். இல்லை என்றால் அனைவராலும் கையடக்கத்தொலைபேசிகளை வாங்க முடியாதவாறு ஒரு இலட்சம் ரூபாவாவது வரி விதிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இறைநம்பிக்கையில்லாத, வெறும் சடவாதத்தை நம்பும் தேராக்களுக்கு இது தவிர வேறு கையடக்கத் தொலைபேசி பாவனைக்கு வேறு தீர்வு கிடையாது. கத்தியால் பல கொலைகளும், கொள்ளைகளும் நடைபெறுகின்றது என இந்த நாட்டில் கத்தியின் விலையை பலஇலட்சங்களாகக் கூட்டுவதால் அல்லது கத்திகள் விற்பனை செய்வதைத் தடைசெய்வதால் கொலைகளைத் தடுக்க முடியாது. கத்தியும் தொலைபேசியும் வெறுமனே சடப் பொருட்கள். அவற்றை பாவிக்கும் நபர்களைப் பொறுத்தே அவற்றின் சாதக பாதகங்கள் தீர்மானிக்கப்படுகின்றன. குறிப்பாக எமக்கு மாதத்துக்கு பல ஆயிரம் ரூபாக்களைத் தேடித்தருவதும் எமது வாழ்வாதாரத்தை பெற்றுக் கொள்வதற்கு அடிப்படையாக அமைவது கையடக்கத் தொலை பேசிதான். இன்னும் பல ஆயிரம் இலட்சம் பேரின் வாழ்வாதாரத்தைத் தேடிப் பெற்றுக் கொள்ள மிக முக்கியமாக இருப்பது கையடக்கத் தொலை பேசி. இதனைத் தடைசெய்வது மிகவும் மடத்தனமான குறுகிய மந்த புத்தியாகும். இளைஞர்களையும் பெண்பிள்ளைகளையும் கைடக்கத் தொலைபேசியில் மூழ்கிவிடாது அதன் ஆபத்துக்களையும் குடும்பத்தை சிதைப்பதில் அதன் பங்கையும் கற்றவர்களும் மத போதகர்களும் உரிய திட்டமிட்டு சரியான முறையில் அவர்களை வழிநடாத்தினால் இந்த பிரச்சினைகளுகக்கு தீர்வு காணலாம். அதற்குரிய சூழ்நிலைகளையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்தும் சூழலை அமைக்க வேண்டும். இது கற்ற மத போதகர்கள், அரசின் உதவியுடன் அவற்றைச் செயல்படுத்தலாம். அது தவிர விஞ்ஞான தொழில்நுட்ப கருவிகளைப் பாவித்து எவ்வாறு முன்னேற முடியும் என்பதை அதில் கைதேர்ந்தவர்கள் வாலிபர்களை அரச உதவியுடன் வழிநடாத்த வேண்டும்.
ReplyDelete