முஸ்லிம்கள் மீது பழிபோட வேண்டாம், நீர் ஒரு பேராசிரியரே அல்ல - ரொஹானை திட்டிய ஹக்கீம்
ஈஸ்ரர் தினமொன்றில் இலங்கையில் நடந்த குண்டுத்தாக்குதல் சம்பவங்களின் பின்னணியில், அரசியல் காரணங்கள் இருக்கலாமெனவும், அந்தச் சம்பவத்தை வைத்துக்கொண்டு முஸ்லிம்களை தீவிரவாதிகளாக காட்ட முயற்சிக்க வேண்டாமெனவும், முஸ்லிம் காங்கிரஸின் தனலவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் அரசியல் நோக்கத்துக்காகவன்றி, மதத் தீவிரவாத குழுவினரால் சுய ஊக்குவிப்பின்பேரில் மேற்கொள்ளப்பட்டதாக பேராசிரியர் ரொஹான் குணரத்னவினால் தேசிய பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் முன்வைக்கப்பட்ட கருத்துக்கு, முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் கடும் எதிர்ப்பை வெளிப்பிட்டுள்ளார்.
மேலும் நீங்கள் ஒரு பேராசிரியர் அல்லர் எனவும் இவ்வாறான தகவல்களை வெளியிட வேண்டாமெனவும் எச்சரித்துள்ளார்.
-விடிவெள்ளி-
Post a Comment