Header Ads



மல்கம் ரஞ்சித் தூக்கியுள்ள போர்க் கொடி


இலங்கையின் சில பகுதிகளை அரசாங்கம் பல்வேறு நாடுகளுக்கு விற்பனை செய்து அதன் அழிவை நோக்கி செல்வதாக கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.


இலங்கை எப்பொழுதும் சுதந்திர நாடாகவே இருந்து வருகிறது என கூறிய பேராயர், “நாங்கள் எந்த ஒரு நாட்டுக்கும் அடிமையாக இருந்ததில்லை” என்றார்.


இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் பாலம் அமைப்பதற்கான அரசாங்கத்தின் முன்மொழிவு குறித்து கருத்து தெரிவித்த பேராயர், அத்தகைய நடவடிக்கைக்கு மக்களின் ஒப்புதலைப் பெறுவதற்கு பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றார்.


பொதுமக்களின் அனுமதியின்றி இவ்வாறான தீர்மானங்களை எடுப்பது தவறானது என பேராயர் வலியுறுத்தியுள்ளார்.


“எங்கள் தேசத்தின் சில பகுதிகளை விற்பதன் மூலம், இலங்கை ஏனைய நாடுகளுக்கு பணிந்து வருகிறது. அதிகாரிகள் பல்வேறு முட்டாள்தனமான முடிவுகளை எடுத்து நாட்டை அழிவை நோக்கி இட்டுச் செல்கின்றனர். சுதந்திரத்தைப் பெற்ற நாம் இப்போது சுதந்திரத்தை இழக்க வேண்டியுள்ளது”


ராகம, தேவத்தையில் உள்ள தேசிய பசிலிக்கா தேவாலயத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஞாயிறு ஆராதனையில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே கொழும்பு பேராயர் இதனைத் தெரிவித்துள்ளார். TL

No comments

Powered by Blogger.