விபத்தில் காயமடைந்தவர் வபாத்
- எஸ்.எம்.எம்.முர்ஷித் -
மோட்டார் சைக்கிள் விபத்தில் காயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த புஹாரி நுஜைக் அஹமட் (வயது – 25) சிகிச்சை பலனின்றி இன்று ஞாயிற்றுக்கிழமை மரணடைந்துள்ளார்.
கடந்த வியாழக்கிழம மட்டக்களப்பு கொழும்பு வீதியில் ஓட்டமாவடி – புனானை எனும் இடத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஆசிரியரான ஸர்பராஸ் ஹூஸைன் முஹம்மது அஸாம் (வயது – 25) மரணமடைந்தார்.
புஹாரி நுஸைக் அஹமட் என்பவர் காயமடைந்த நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று -27- ஞாயிற்றுக்கிமை மரணமடைந்துள்ளார்.
Post a Comment