Header Ads



லங்கா பிரீமியர் லீக் வரலாற்றில் கரும்புள்ளி, வீரர்கள் வரியும் செலுத்துவதில்லை


லங்கா பிரீமியர் லீக் சட்டவிரோதமானது என விளையாட்டுத்துறை அமைச்சர் ரொசான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.


இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையோ அல்லது எல்பிஎல் போட்டிகளிற்கான உரிமைகளை பெற்றுள்ளவர்களோ எல்பிஎல் போட்டிகளை நடத்துவதற்காக  விளையாட்டு துறை அமைச்சிடம் அனுமதியை பெறவில்லை- முன்னைய விளையாட்டுத்துறை அமைச்சின் கீழ் இந்த தொடர் எவ்வாறு நடைபெற்றது என்பது தெரியாது-ஆனால் என்னுடைய அனுமதியை அவர்கள் பெறவில்லை.


விளையாட்டுதுறை சட்டங்களின் அடிப்படையில் அனுமதி பெறவேண்டும் என தெரிவித்து நான் இரண்டுமுறை கடிதங்களை அனுப்பினேன்,


எல்பிஎல் போட்டிகளில் விளையாடுவதற்காக பெறப்படும் பணத்திற்காக வீரர்கள் வரி செலுத்துவதில்லை,


எல்பிஎல் இலங்கையின் சட்டங்களை பின்பற்றுவதில்லை, எல்பிஎல் போட்டிகள் சட்டவிரோதமானவை என்பதால் நான் இந்த போட்டிகளின் ஆரம்பநிகழ்வில் கலந்துகொள்ளுமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோளை புறக்கணித்தேன்.


இது இலங்கையின் வரலாற்றில் மற்றுமொரு கரும்புள்ளி என அவர் தெரிவித்துள்ளார். வீரகேசரி

No comments

Powered by Blogger.