'மாதா' என்ற வார்த்தை 'மாஹ்தா' என பிரசாரம் செய்யப்பட்டிருக்கலாம்
பாடகி உமாரா சிங்கவன்சவிற்கு மேலதிகமாக கிரிக்கெட் சபை மற்றும் கல்வி அமைச்சின் பிரதிப்பணிப்பாளர் ஆகியோரிடமும் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
2023 எல்.பி.எல் ஆரம்ப விழாவில் தேசிய கீதம் பாடும் போது தேசிய கீத பாடல் வரிகள் தவறாக உச்சரிக்கப்பட்டுள்ளமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில்,தேசிய கீதத்தை பாடும் போது 'மாஹ்தா' என்ற வார்த்தைகளை உச்சரிக்கவில்லை என்றும், அதிக சுருதியில் பாடியதாகவும் உமாராவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இலத்திரனியல் ஊடகங்களில் பாடல் எதிரொலித்ததால், 'மாதா' என்ற வார்த்தை 'மாஹ்தா' என பிரசாரம் செய்யப்பட்டிருக்கலாம் என்றும் கூறியுள்ளார்.
கல்வி அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசிய கீதம் குறைந்த தொனியில் பாடப்பட வேண்டும் என அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் புலனாய்வுத்திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை இந்த வாரத்திற்குள் பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அசோகவிடம் சமர்ப்பிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பாடகி உமாரா சின்ஹவன்ச தேசிய கீதத்தை சிதைத்து பாடியதாக குற்றம் சாட்டப்பட்டதையடுத்து தனது முகநூல் கணக்கில் மன்னிப்புக் கடிதம் ஒன்றை பதிவிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment