Header Ads



நமது பங்கை கூட, அனுபவிக்க மறந்து விடுகின்றோம்.


டீவிகள் வந்தன, புத்தகம் வாசிப்பதை மறந்துவிட்டனர். 


கார்கள் வந்தன, நடப்பதை மறந்துவிட்டனர்.


கைப்பேசிகள் வந்தன, கடிதம் எழுதுவதை மறந்துவிட்டனர்.


கம்ப்யூட்டர்கள் வந்தன, வார்த்தைகளை உச்சரிக்க மறந்துவிட்டனர். 


வங்கிகள் வந்தன, பணத்தின் மதிப்பை மறந்துவிட்டனர். 


வாசனை திரவியங்கள் வந்தன, பூக்களின் வாசனையை மறந்துவிட்டனர்.


துரித உணவுகள் வந்தன, சமைப்பது எப்படி என்று மறந்துவிட்டனர். 


ஓடியோடி உழைக்க பழகிவிட்டனர், நின்று சிந்திக்க மறந்துவிட்டனர். 


வாட்ஸ்அப் வந்தது, உறவினர்கள், நண்பர்களை சந்திக்க மறந்துவிட்டனர். 


நாம் உண்டதும், குடித்ததும், உடுத்ததும், மற்றவர்களுக்கு உதவியதும் தான் நமக்கானது. மற்றது மற்றவர்களுக்கானது. 


சீனாவில் கோடிஸ்வரர் ஒருவர் இறந்து போனார். விதவையான அவரது மனைவி ($ 1.9) பில்லியன்களை வாரிசாக பெற்றாள் பின்னர் அவரது கார் டிரைவரை அவள் மணந்தாள். 


அந்த கார் டிரைவர் சொல்கிறார்: நான் எனது முதலாளிக்கு பணிவிடை செய்வதாக நினைத்துக்கொண்டேன். உண்மையில் அவர்தான் எனக்கு பணிவிடை செய்துள்ளார்' என்றாராம்.


நாம் உணர வேண்டிய உண்மை என்னவென்றால்: அதிக பணம் சேர்ப்பதை விட, அதிக ஆயுள் வாழ்வதே உண்மையான வரமாகும். எனவே உங்கள் உடல், உள ஆரோக்கியத்துக்கு முன்னுரிமை வழங்குங்கள்!


நம் மொபைல்களில் (70%) நமக்கு பயனற்ற அம்சங்கள்.


விலையுயர்ந்த நம் கார்களில் (70%) நமக்கு பயனற்ற தொழில்நுட்பங்கள். 


மாளிகை போன்ற நம்வீடுகளில் (70%) வை  பயனற்ற, தேவையற்ற செலவுகள்.


நம்மிடம் இருக்கும் ஆடைகளில் (70%) வை நாம் அணியாதவை.


அப்படியென்றால் நாம் சம்பாதிப்பதில் 70% மற்றவர்களுக்கானது. நமது 30% பங்கை கூட அனுபவிக்க மறந்துவிடுகின்றோம். 


1. எந்த நோயும் இல்லாவிட்டாலும் உடல் மருத்துவ பரிசோதனைகளை செய்துகொள்ள தவறாதீர்கள்.

 

 2.  தாகம் இல்லாவிட்டாலும் அதிகம் தண்ணீர் குடிக்கப் பழகுங்கள். 


 3. என்ன பெரிய பிரச்சனைகளாக இருந்தாலும் மறக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.


 4. என்ன பெரிய பணம் இருந்தாலும், அடக்கமாக இருக்க பழகுங்கள்.


 5.  பணம் இல்லாவிட்டாலும் போதுமென்ற மனதோடு வாழ கற்றுக்கொள்ளுங்கள்.


 6. என்ன பெரிய வேலையாக இருந்தாலும், உங்கள் உடலையும் ஆன்மாவையும் கவனிக்க தவறாதீர்கள். 


 7. உங்களின் அன்புக்குறியவர்களுக்காக நேரத்தை ஒதுக்குங்கள்.


 8 .  உங்களுக்காக நேரத்தை ஒதுக்குங்கள், சுற்றுலா செல்லுங்கள், படியுங்கள், வாசியுங்கள், படைத்தவனுக்கு நன்றியுள்ளவர்களாக வாழுங்கள்.


✍ தமிழாக்கம் / imran farook

No comments

Powered by Blogger.