மடகாஸ்கரில் கொடி கட்டிப் பறக்கும், இலங்கை முஸ்லிம் வியாபாரிகள் - செய்துள்ள அளப்பெரும் பணிகள்
மடகாஸ்கர் குடியரசு, ஆப்பிரிக்கக் கண்டத்தின் தென்கிழக்கே இந்தியப் பெருங்கடலிலுள்ள ஒரு பரந்த தீவு ஆகும்.
உலகிலேயே நான்காவது மிகப்பெரிய தீவாகவும் மடகாஸ்கர் உள்ளது.
மடகாஸ்கரின் வரலாறு கி.பி. ஏழாவது நூற்றாண்டில் இருந்து ஆரம்பமாகியுள்ளதுடன், ஆரம்பகாலத்தில் அரேபியர்கள் இங்கு வணிக நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
காலப்போக்கில் ஐரோப்பியர்களின் காலனித்துவத்துக்குள் சிக்குண்ட மடகாஸ்கர் இறுதியாக பிரஞ்சு காலனித்துவத்திலிருந்து விடுதலை பெற்று சுதந்திரக் குடியரசாக உருவானது.
இந்த நாடு கிறிஸ்தவ நாடாக உள்ளபோதும் இங்கு மாணிக்கக்கல் வியாபாரித்தில் கொடிகட்டி பறப்பவர்களாக முஸ்லிம்கள் உள்ளனர்.
அதிலும் இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து வாழும் தமிழ் பேசும் முஸ்லிம்கள் இங்கு மிகப் பெரிய மாணிக்கக்கல் வியாபாரிகளாக இருக்கின்றனர்.
மடகாஸ்கரின் இலாகாக்கா என்ற நகரத்திலேயே தமிழ் பேசும் முஸ்லிம்கள் அதிகமாக வாழ்வதுடன், இங்கு உள்ள பிரதான மாணிக்கக்கல் கடைகளின் உரிமையாளர்களாகவும் உள்ளனர்.
அதேபோன்று அங்குள்ள பெரும்பலான கடைகளை வைத்திருப்பதும் தமிழ் பேசும் இலங்கை முஸ்லிம்கள்தான்.
இலகாக்காகவில் Sapphire என்ற மாணிக்கக்கல் வியாபாரம்தான் சிறப்பாக இடம்பெறுகிறது.
இலாக்காகவுக்கு அருகில மனம்மே (Manamby), சக்காரக (sakaraka), தேரே (there) ஆகிய நகரங்களிலும் தமிழ் முஸ்லிம்களின் வியாபாரம் கொடிகட்டி பறக்கிறது.
தமிழ் முஸ்லிம்கள் இங்கு வந்து வியாபாரத்தில் ஈடுபட தொடங்கியதில் இருந்து பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை செய்துள்ளதுடன், குறித்த பிரேதேசங்களில் பாடசாலைகளையும் கட்டிக்கொடுத்துள்ளனர்.
அதேபோன்று வழிபாட்டுத் தளங்களையும் கட்டியுள்ளதுடன், பொது மக்களுக்கும் பல உதவிகளை செய்துக்கொடுத்துள்ளனர்.
இலங்கையிலிருந்து கடந்த நான்கு தசாப்தங்களுக்கு முன்னர் இவர்கள் அங்கு குடியேறியுள்ளதுடன், மாற்றுத் திருமணங்களால் இலங்கையர் கலப்பினமும் அங்கு உருவாகியுள்ளது.
தமிழ் பேசும் முஸ்லிம் தாம் கொள்வனவு செய்யும் மாணிக்கக்கல்களை இந்தியாவின் கொல்கத்தா, மும்பை உட்பட பாங்கொக், அமெரிக்கா, ஐரோப்பா என பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர்.
இலங்கையில் இருந்து இவர்கள் குடிபெயர்ந்து மடகாஸ்கரில் வாழ்த்துவந்தாலும் காலத்துக்கு காலம் இங்கு வந்து செல்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
oruvan
Post a Comment