Header Ads



இந்திய வைத்தியர்கள் இலங்கையில், வைத்தியசாலைகளை ஆரம்பிக்க முழு ஒத்துழைப்பு வழங்கப்படும்


இந்திய வைத்தியர்கள் இலங்கையில் வைத்தியசாலைகளை ஆரம்பிப்பதற்கான முழு ஒத்துழைப்பையும் வழங்குவதாக வர்த்தக இராஜாங்க அமைச்சர் S.வியாழேந்திரன் உறுதியளித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.


ஆந்திர பிரதேசத்தின் விஜயவாடாவில் உள்ள வைத்திய நிறுவனமொன்றின் மருத்துவ திட்டமொன்றை ஆரம்பித்து வைத்ததன் பின்னரே அவர் இதனை தெரிவித்துள்ளார்


ஆந்திர மாநிலத்தில் கிடைக்கும் சிறப்பான மருத்துவ வசதிகளைப் போன்று இலங்கையிலும் ஏற்படுத்திக் கொடுப்பதற்கான நடவடிக்கையை முன்னெடுப்பதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. 


இதற்காக கொழும்பு தவிர்ந்த ஏனைய நகரங்களிலும் வைத்தியசாலைகளை உருவாக்குவதற்கான அனுமதி வழங்கப்படும் எனவும் அதற்கான நிலத்தை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் S.வியாழேந்திரன் தெரிவித்ததாக இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. 


இந்திய வைத்தியர்கள் இலங்கையில் வைத்தியசாலைகளை நிறுவுவதன் மூலம் இலங்கை பிரஜைகளும் பலன் பெற வேண்டும் என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 

No comments

Powered by Blogger.