இலங்கை அணி வீரர்களுக்கு கொரோனா
ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான பயிற்சி போட்டியில் பங்குபற்றிய இலங்கை அணி வீரர்களான அவிஷ்க பெர்னாண்டோ மற்றும் குசல் ஜனித் பெரேராவுக்கு கொவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் இலங்கை அணியின் ஏனைய வீரர்களுக்கும் கொவிட்-19 தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
13போட்டிகள் கொண்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் எதிர்வரும் 30ம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
அதன்படி இலங்கை அணியானது எதிர்வரும் 31ம் திகதி தனது முதலாவது போட்டியில் பங்களாதேஷ் அணியை எதிர்கொள்ளவுள்ளது.
இவர்கள் இருவரும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஏனைய வீரர்களுக்கு மேற்கொள்ளப்படும் பரிசோதனையில் அவர்களுக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்படும் பட்சத்தில் பங்களாதேஷ் அணியுடனான போட்டியானது இரத்து செய்யப்படும் அல்லது போட்டிகள் பிற்போடப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
Post a Comment