நகை திருடும் சம்பவங்கள் அதிகரிப்பு
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரண்டு சம்பவங்கள் ஏற்கனவே பதிவாகியிருந்த நிலையில் இன்று (27) அதிகாலை 2 மணியளவில் யாழ்ப்பாண பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சங்கிலியன் வீதி பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் இறங்கிய முகமூடி அணிந்த மூவரடங்கிய கும்பல் வீட்டிலிருந்தவரை கட்டி வைத்து தாக்கி கத்தி முனையில் அச்சுறுத்தி வீட்டிலிருந்த 20 பவுண் நகைகளை திருடி சென்றதாக வீட்டு உரிமையாளர் தெரிவித்தார்.
குறித்த சம்பவம் தொடர்பில் தன் யாழ்ப்பாண பொலிஸில் எத்தனை முறைப்பாடு பதிவு செய்து உள்ளதாகவும் தெரிவித்தார்.
கடந்த புதன்கிழமையிலிருந்து திருட்டு சம்பவங்கள் இடம் பெற்று வரும் நிலையில் திருட்டு சம்பவங்கள் தொடர்பில் ஏற்கனவே யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இன்று வரை கைது செய்யப்படவில்லை.
குறித்த திருட்டு சம்பவங்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளது என பொதுமக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
-யாழ். நிருபர் பிரதீபன்-
Post a Comment