இது சிங்களவர்களின் பூர்வீக தாயகம், இதை மனதில் வைத்திருந்தால் சரி
வடக்கு - கிழக்கு தமிழர்களின் பூர்வீக தாயகம் அல்ல, இது சிங்களவர்களின் பூர்வீக தாயகம், இந்நாட்டில் தமிழர்களுக்கு எந்த இடமும் சொந்தம் அல்ல என மீண்டுமொரு சர்ச்சைக்குரிய கருத்தை முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா வெளியிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், வந்தேறு குடிகளான தமிழர்கள், இலங்கையில் எந்த இடத்தையும் சொந்தம் கொண்டாட முடியாது.
இந்தியாவிலிருந்து இலங்கை வந்த தமிழர்கள், இங்குள்ள இடங்களைச் சொந்தம் கொண்டாடினால் அவர்கள் மீண்டும் இந்தியாவுக்கு விரட்டியடிக்கப்படுவார்கள்.
வடக்கு - கிழக்கை "தமிழீழம்" என்று பிரபாகரன் சொந்தம் கொண்டாட முயன்றார்.
இறுதியில் அவருக்கு என்ன நடந்தது என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம்.
இதைத் தமிழர்கள் மனதில் வைத்திருந்தால் சரி. இல்லையேல் அவர்களுக்குச் சிங்களவர்கள் செயலில் தான் பாடம் கற்பிக்க வேண்டி வரும் என்றார்.
மூளை காய்ந்த இந்த மடையன் கூறுவது இந்த அரசாங்கத்துக்கு கேட்கின்றதா? இவனைச் சிறையில் தள்ளிவிட்டால் இந்த நாட்டு மக்கள் நிம்மதியாக வாழ்வார்கள். இவனுடைய மென்டல் சின்ட்ரோம் காரணமாக கக்குவதையெல்லாம் பத்திரிகைள் பிரசுரிப்பது வெறும் கால நேர, பணம் விரயம் மட்டும்தான்.
ReplyDelete