Header Ads



மரத்தில் விளையாடிக்கொண்டிருந்த சகோதரர்கள் - மின்னல் தாக்கியதில் ஒருவர் பலி


மின்னல் தாக்கி 10 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


மஹியங்கனை – நவமெதகம – தெஹியத்தகண்டி பகுதியில் இச் சம்பவம் பதிவாகியுள்ளது.


10 வயது சிறுவனும் அவரின் ஆறு வயது சகோதரனும் வயலிலுள்ள மரம் ஒன்றில் ஏறி விளையாடிக்கொண்டிருந்த நிலையில் மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி மூத்த சகோதரன் உயிரிழந்துள்ளார்.


ஆறு வயது சிறுவன் கடுமையாக அதிர்ச்சிக்குள்ளாகிய நிலையில் மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


No comments

Powered by Blogger.