பால் சேகரிக்கச் சென்ற லொறி விபத்தில் சிக்கியது
பதுளை - ஹாலி எல, உனுகொல்ல வீதியில் லொறியொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் லொறியில் பயணித்த மூவர் காயமடைந்துள்ளதாக ஹாலிஎல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று (23.08.2023) இடம்பெற்ற இந்த வீதி விபத்தில் காயமடைந்த மூவரும் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஹாலிஎலயில் இருந்து உனுகொல்ல பிரதேசத்திற்கு பால் சேகரிப்பதற்காக சென்ற லொறியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
சாரதியால் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனதே விபத்துக்கான காரணம் என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த விபத்து தொடர்பில் ஹாலிஎல பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ருவான் குணதிலக்கவின் பணிப்புரையின் பேரில், போக்குவரத்துப் பிரிவினரால் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஹாலிஎல பொலிஸார் கூறியுள்ளனர்.
Post a Comment