Header Ads



'ரமழான் பரிசு மழை' வெற்றியாளர் விபரமும், பரிசு வழங்கும் நிகழ்வும் (படங்கள் இணைப்பு)



























2023 புனித ரமழான் மாதத்தில் நடைபெற்ற 'ரமழான் பரிசு மழை' போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ்கள் மற்றும் பரிசு வழங்கும் நிகழ்வு 16.08.2023ம் திகதி புதன் கிழமை AMYS நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் நிறுவனத்தின் முகாமைத்துவப்பணிப்பாளர் அஷ் ஷெய்க் எம் எஸ். எம். தாஸீம் (கபூரி) தலைமையில் நடைபெற்றது. 


இந்நிகழ்வில் பிரதம அதிதியாக புனித மக்கா ஹரம் ஷரீபில் பிரதான பதவிகளில் மிக நீண்ட காலம் பணியாற்றிய இலங்கையைச் சேர்ந்த சமூக சேவையாளர் அஷ் ஷெய்க் முஹம்மது பின் ரியாழ் அஸ் செய்லானி கலந்து கொண்டார்.


அத்துடன், கௌரவ அதிதியாக The Traveler Global (PVT) Ltd நிறுவனத்தின் உரிமையாளர், தொழில் அதிபர் அல் ஹாஜ் ரிஸ்மி ரியாழ் , விசேட அதிதியாக Makolla Muslim Orphanage அமைப்பின் பணிப்பாளர் சபை உறுப்பினர், சமூக சேவையாளர் எம்.சி. முழப்பர் கவ்னைனி அவர்களும் கலந்து கொண்டதுடன், AMYS நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் உப செயலாளருமான அஷ் ஷெய்க் எம் .எஸ். எம் . தாஸீம் (கபூரி) அவர்களும், நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு. ஏ.ஜே. எம். வாரித் (MBA) அவர்களும் மற்றும் பல பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர். 


அத்துடன், போட்டியில் கலந்து கொண்டு வெற்றிபெற்ற போட்டியாளர்கள் உற்பட பெற்றோர்களும் கல்வி நிறுவனங்களின் பணிப்பாளர்கள், பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர்.


அறிவுத் தேடலை விருத்தி செய்திடும் நோக்கிலும், ரமழாளின் பொழுதுகளை உயிரோட்டமுள்ளதாக பயன்படுத்திடும் நோக்கிலும் ரமழான் பரிசு மழை' போட்டி நிகழ்ச்சி தொடர்ந்தும் 11 வது தடவையாக AMYS நிறுவனத்தினால் ஜப்னா முஸ்லிம் இணையத்தளத்துடன் இணைந்து வெற்றிகரமாக நடாத்தப்பட்டு வருகின்றமை விசேட அம்சமாகும். 


அத்துடன் இம்முறை நடைபெற்ற போட்டி நிகழ்ச்சி திறந்த போட்டியாகவும், தந்தையை இழந்த சிறார்ககளுக்கான பிரத்தியேக போட்டியாகவும் இரு பிரிவுகளில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.


இரு பிரிவுகளிலும் வெற்றிபெற்றவர்களின் பெயர் விபரங்களை கீழே காணலாம்.






No comments

Powered by Blogger.