நீருக்குள் காணாமல் போன நகரம் மீண்டும் காட்சியளிக்கிறது
கடும் வரட்சி காரணமாக விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் மிக வேகமாக வீழ்ச்சியடைந்துள்ளது.
இதனால் பழைய தெல்தெனிய நகரம் காட்சி கொடுக்க ஆரம்பித்துள்ளதாக விக்டோரியா நீர்த்தேக்க கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
மகாவலி ஆறு வறண்டு கிடப்பதால் குழாய் நீர் விநியோகமும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
பல்லேகலை, பலகொல்ல, குருதெனிய ஹாரகம, கன்னே கும்புர, நத்தரம்பொத்த, குண்டசாலை, தியன அளுத்வத்த போன்ற பிரதேச மக்களுக்கு நீர்ப் பிரச்சினை மோசமடைந்துள்ளது.
விக்டோரியா நீர்த்தேக்கத்தில் நீர் வற்றியதையடுத்து பழைய தெல்தெனிய நகரின் இடிபாடுகள் வெளிப்பட்டுள்ளன. இதனை மக்கள் பார்வையிட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
Post a Comment