யார் இதனைத் தீர்த்து வைப்பார்கள்...?
கொழும்பு தெமடகொட வீதியிலுள்ள ஹாதி புத்தக நிலையத்துக்குச் (தற்போதுஇக்ரா)சென்று அதன் உரிமையாளரான நீண்ட கால நண்பர் எம்.எஸ்.அஸ்ரப் அவர்களுடன் சிறிது நேரம் கலந்துரையாடினேன்.
இஸ்லாமிய புத்தக நிலையங்கள் எதிர்நோக்கும் சவால்கள் பற்றி அவர் விளக்கினார்.
வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் இஸ்லாமிய மற்றும் அரபு நூல்களுக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைப் பெறுவதில் நிலவும் தாமதம் தம் வியாபார முயற்சிகளுக்கு பெரும் பாதிப்பினன ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.
பொறுப்பானவர்களது அவதானம் இது தொடர்பாக ஈர்க்கப்படுவது அவசியமாகும்.
1956ல் வுல்பண்டல் வீதியில் ஹாதி புத்தக நிலையம் ஆரம்பிக்கப்பட்டது. மர்ஹும் ஏ.எம்.எம் மஸுத் ஆலிம் இதனைத் திறந்து வைத்துள்ளார்.
இப்போது ஹாதி புத்தக நிலையம் தெமடகொட வீதியில் இரு இடங்களில் இரு சகோதர்களால் நடத்தப்படுகிறது.இக்ரா புத்தக சாலையில் சுமார் 5லட்சம் புத்தகங்கள் தேங்கிக் கிடப்பதாகவும் ஒரு தொகுதியை இலவசமாக வழங்கி வருவதாகவும் சகோதரர் அஷ்ரப் தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின் இஸ்லாமிய புத்தக நிலையங்கள் பல சவால்களை எதிர் நோக்கிவருகினறன.
யார் இதனைத் தீர்த்து வைப்பார்கள்?
Post a Comment