Header Ads



இலங்கை, மாலைத்தீவு, ரஷ்ய விமான சேவை அதிகரிப்பு


இலங்கை மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகளுக்கான விமான சேவையை அதிகரிப்பதை ரஷ்ய விமான சேவையான ஏரோஃபுளோட் உறுதிப்படுத்தியுள்ளது


இதன்படி, ரஷ்யாவில் இருந்து இலங்கைக்கான விமான சேவையை செப்டெம்பர் மாதம் 09ஆம் திகதியில் இருந்து வாராந்தம் 3 தடவைகள் இயக்குவதற்கு ஏரோஃபுளோட் விமான சேவை தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


புதிய மேலதிக சேவைகள் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் இயங்கும் என தெரிவிக்கப்படுகிறது.


புதிய விமான சேவைகளுக்கு அமைய இலங்கையில் இருந்து ரஷ்யாவின் மொஸ்கோவிற்கு வியாழன், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விமான சேவைகள் இடம்பெறவுள்ளன.


அத்துடன் ரஷ்யாவின் மொஸ்கோவில் இருந்து வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இலங்கைக்கான விமான சேவைகள் இடம்பெறும் என ஏரோஃபுளோட் நிறுவனம் அறிவித்துள்ளது.


இதேவேளை, மாலைத்தீவுக்கான விமான சேவைகளின் எண்ணிக்கை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதியிலிருந்து அதிகரிப்பதற்கு ஏரோஃபுளோட் நிறுவனம் தீர்மானித்துள்ளது.


இதன்படி, ரஷ்யாவில் இருந்து எஸ்.யு.320 மற்றும் எஸ்.யு.321 ரக விமானங்களை வாராந்தம் 7 தடவைகள் மாலைத்தீவுக்கு இயக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.