Header Ads



எரியும் பிரச்சினைகள் தொடர்பில், அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரிடம் சிவில் ஆர்வலர்கள் விவரிப்பு


மட்டக்களப்பு வந்திருந்த இலங்கை மற்றும் மாலைத்தீவுகளுக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் போல் ஸ்டீபன்ஸ், மற்றும் அவரது குழுவினர் சிவில் சமூக ஆர்வலர்களை சந்தித்து சமூகங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் நெருக்கடிகள் குறித்து கேட்டறிந்து கொண்டனர்.


வியாழக்கிழமை 31.08.2023 மட்டக்களப்பு ஈஸ்ற் லகூன் தனியார் விடுதியில் இச்சந்திப்பு இடம்பெற்றது.


ஆயுத முரண்பாடுகளுக்கு முன்னரும் ஆயத முரண்பாடுகளின்போதும் தற்போதைய ஆயுத முரண்பாடுகள் முடிவுற்ற நிலையிலும் சமூகங்களுக்கிடையிலான சவால்கள் நெருக்கடிகள் சகவாழ்வின் சீர்குலைவு பற்றி அங்கு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.


குறிப்பாக மட்டக்களப்பில் எரியும் நெருப்பாக உள்ள காணிப் பிரச்சினைகள் குறித்து அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரிடம் சிவில் சமூக ஆர்வலர்கள் விவரித்தனர். சமூகங்களுக்கிடையில் நிலவ வேண்டிய சகவாழ்வின் முக்கியத்துவம் குறித்தும் அங்கு வலியுத்தப்பட்டது.


சிவில் சமூக ஆர்வலர்கள் சார்பில் கிழக்கு சமூக அபிவிருத்தி மையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் எம்;.எல்.எம். புஹாரி முஹம்மத், சிவில் சமூக செயற்பாட்டாளரும் சட்டத்தரணியும் சகவாழ்வு மையத்தின் ஸ்தாபக சிந்தனையாளருமான ஏ. உவைஸ், சிவில் சமூக செயற்பாட்டாளரும் சமூக ஆய்வு எழுத்தாளரும் சுதந்திர ஊடகவியலாளரும் வளவாளருமான ஏ.எச்.ஏ. ஹுஸைன், செயற்பாட்டாளர்  முஹம்மத் லியாப்தீன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

No comments

Powered by Blogger.