Header Ads



யுவதிக்கு வந்த நிர்வாண, படங்களினால் திருமணம் நிறுத்தம்


யாழில் திருமணத்திற்கு தயாரான பெண்ணுக்கு , யுவதியின் அந்தரங்க புகைப்படங்களை அனுப்பி வைத்த முன்னாள் காதலனால் திருமண நிகழ்வு பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.


யாழின் பிரபலமான இடமொன்றில் வாழ்ந்துவரும் யுவதிக்கும்  வெளிநாட்டுவாழ்  மாப்பிள்ளைக்கும் திருமம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.


இந்நிலையில்  திருமணத்திற்கு முந்தைய சடங்கான பொன்னுருக்கு விழாவில் மர்மநபர்களால் சர்ப்பிரஸ் கிப்ட் ஒன்று கிடைத்துள்ளது. அந்த கிப்டை மணமகனே பார்க்கவேண்டும் எனவும் மர்மநபர்கள் கூறிச்சென்றுள்ளனர்.


இதனையடுத்து பொன்னுருக்கு சடங்கில் சர்ப்பிரைஸ் கிப்பை திறந்து பார்த்த மணமகன் யுவதியின் அந்தரங்க புகைப்படங்களை பார்த்து பெரும் அதிர்ச்சியடைந்துள்ளார்.


அத்துடன் புகைப்படங்களுடன் அழுகிய மாம்பழங்கள் சிலவும் இருந்துள்ளது. இதையடுத்து பெண் மற்றும் மாப்பிள்ளை வீட்டாருக்கும் இடையில் மோதல் நிலை தோன்றியதை அடுத்து பொன்னுருக்கு சடங்கு இடைநடுவில் நிறுத்தப்பட்டதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.


அதேசமயம் குறித்த யுவதி உயர்கல்வி கற்கையில் சிரேஸ்ட மாணவர் ஒருவருடன் காதல் தொடர்பை பேணி வந்ததாகவும், எனினும் பின்னர் அந்த தொடர்பு முறிந்ததாகவும் கூறப்படுகின்றது.


இதையடுத்து யுவதியை , முன்னாள் காதலன் தொடர் தொல்லை கொடுத்த நிலையில் , அது பொலிஸ் நிலையவரை சென்றதாகவும் கூறப்படுகின்றது.


இந்நிலையில் சர்ப்பிரைஸ் கிப்ட் எனும் பெயரில் மணமகனுக்கு அனுப்பப்பட்ட பொதியால் யுவதியின் திருமணம் கேள்விக்குறியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.      

No comments

Powered by Blogger.