Header Ads



இளம் வயதினரும் பெண்களும் எமக்கு அவசியம்


எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக ஐக்கிய தேசியக்கட்சி மற்றும் அதன் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் விரிவான அரசியல் கூட்டணி உருவாக்கப்படும் என முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.


கொழும்பு வடக்கு தொகுதியின் முகத்துவாரம் போனவிஸ்ட மைதானத்தில் நடைபெற்ற ஐக்கிய தேசியக்கட்சியின் அதிகார சபைக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.


ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க சுயாதீன மற்றும் கட்சி சார்பற்ற வேட்பாளராக போட்டியிடுவார்.


எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதமளவில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும்.


தற்போதைய காலம் நம் அனைவருக்கும் கஷ்டமான காலம் என்பதை நாம் அறிவோம். இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.


சாப்பிடவும் குடிக்கவும் முடியுமா, பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளை எப்படி முன்னெடுப்பது போன்ற பிரச்சினைகள் உங்களது தலைக்குள் இருக்கலாம்.


அரசியல் பூச்சாண்டிகளை உருவாக்கி நாடு ஒன்றை முன்னெடுத்துச் செல்ல முடியாது. பேய்களை உருவாக்கி நாட்டில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த முடியாது.


நாட்டை அபிவிருத்தி செய்வதற்காக மேற்கொள்ளும் நடவடிக்கைகள் கசப்பாக இருந்தாலும் உண்மையை கூறினால் அதன் நிஜமான பிரதிபலன் கிடைப்பதற்கு நீண்டகாலம் செல்லாது.


ரணில் விக்ரமசிங்கவுக்கும் இதுதான் நடந்தது. இதனால், நாடொன்றை உருவாக்கக்கூடிய இளம் வயதினரும் பெண்களும் எமக்கு அவசியம் எனவும் ரவி கருணாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.