ஆட்டோ பந்தயத்தை வீடியோ எடுத்தவர் மரணம்
இதில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றுமொரு இளைஞர் படுகாயமடைந்துள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர் பாணந்துறை நல்லுருவ மொரவின்ன பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய ஜயவீர லியனகே தேஷான் பெரேரா என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
களுத்துறையில் இருந்து பாணந்துறை நோக்கி இடம்பெற்ற முச்சக்கரவண்டி போட்டியை மோட்டார் சைக்கிள்களில் காணொளி எடுத்துக்கொண்டு மற்றுமொரு இளைஞர் குழு வந்துள்ளது.
இதன்போது நல்லுருவ பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியை விட்டு விலகி மின்கம்பத்துடன் மோதியதில் பலத்த காயமடைந்த இரு இளைஞர்களும் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அனுமதிக்கப்பட்ட இளைஞர்களில் ஒருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சட்ட வைத்திய அதிகாரி பிரசான் விஜேதுங்கவினால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
Post a Comment