Header Ads



பொலிஸில் வைக்கப்பட்டிருந்த இளைஞர் அடித்துக்கொலை என குடும்பத்தினர் குற்றச்சாட்டு - ஜனாஸா இன்று நல்லடக்கம்


பொலிஸாரால் அண்மையில் கைது செய்யப்பட்டு திருகோணமலை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞர் நேற்று (23) உயிரிழந்தார். 


இந்த சம்பவத்தில் நீதியை நிலைநாட்டுமாறு உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


குறித்த இளைஞர் மீது பொலிஸ் நிலையத்தில் கடந்த 21 ஆம் திகதி முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 


இந்த நிலையில், நேற்று முன்தினம் அந்த இளைஞர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, விசாரணைக்காக பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.


எனினும், அவரை பொலிஸார் அடித்துக்கொன்றுவிட்டதாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 


இந்த மரணத்தில் நீதியை நிலைநாட்டக் கோரி ஜமாலியா பிரதேச மக்கள் நேற்றிரவு வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


இதன்போது, திருகோணமலை பொலிஸார் நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர். 


இதனிடையே, குறித்த இளைஞருக்கு எதிராக முறைப்பாடு செய்தவர் மீதும் சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.


தாக்குதலுக்குள்ளானவர் திருகோணமலை மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.


உயிரிழந்த இளைஞரின் ஜனாஸா பிரேத பரிசோதனைகளை அடுத்து உறவினர்களிடம்  இன்று மாலை கையளிக்கப்பட்டது.


மேலதிக இரசாயன பகுப்பாய்விற்காக  உடல்பாகங்கள் கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

No comments

Powered by Blogger.