ரஷ்யாவில் இலங்கையர்களுக்கு தொழில் வாய்ப்பு
ரஷ்யாவின் நிஸ்னி நோவ்கோரோடில் பிராந்திய அரசாங்க அதிகாரிகளுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்டு வருவதாக இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
வரலாற்றில் முதல் தடவையாக ரஷ்ய கூட்டமைப்பில் உள்ள இலங்கை திறன்மிக்க புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு நேரடி வேலை வாய்ப்புகளை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
இலங்கையின் முழு உரிமையாளரான அரச நிறுவனமான இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவருடன் (SLFEA) இணைந்து இந்த வேலை வாய்ப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த முயற்சியின் கீழ், 58 தையல்காரர்களைக் கொண்ட முதல் குழு இம்மாதம் 2 ஆம் திகதி ரஷ்ய கூட்டமைப்பை அடைந்தது. இந்த குழு நிஸ்னி நோவ்கோரோட் பகுதியில் அமைந்துள்ள இரண்டு புகழ்பெற்ற ஜவுளி உற்பத்தி ஆலைகளில் பணியமர்த்தப்படுகின்றனர்.
தேர்ந்தெடுக்கப்பட்ட தையல்காரர்களை இடைநிலை நிறுவனங்களின் ஈடுபாடு இல்லாமல் வேலைக்கு அமர்த்துவதற்கு SLFEA உடன் ஒப்பந்தங்களில் ஈடுபடுவதற்கு தூதரகம் முதலாளிகளுக்கு வசதி செய்ததை அடுத்து இந்த ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது.
இலங்கையின் திறமையான புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கான பொறிமுறையை வகுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்பை ஏற்படுத்தி வருவதாக மொஸ்கோவில் உள்ள இலங்கை தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கைகள் ரஷ்ய கூட்டமைப்பு மற்றும் அங்கீகாரம் பெற்ற பிற நாடுகளில் பல தொழில்நுட்ப வகைகளின் கீழ் வேலை வாய்ப்புகளைப் பார்க்கும் என தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.
Post a Comment