Header Ads



சாம்பியன் பட்டம் வென்றது ஸ்பெயின்


 பிஃபா மகளிர் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் ஸ்பெயின் அணி முதன் முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இறுதிப் போட்டியில் அந்த அணி, இங்கிலாந்தை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தியது. ஆட்டத்தின் 29 ஆவது நிமிடத்தில் ஸ்பெயின் வீராங்கனை ஓல்கா கார்மோனா அடித்த கோலே அந்த அணியின் வெற்றிக்கான கோலாக அமைந்தது.


இந்த ஆட்டத்தை மைதானத்தில் 70 ஆயிரத்திற்கும் அதிகமான ரசிகர்கள் நேரில் கண்டு களித்தனர். உலகம் முழுவதும் பல கோடி ரசிகர்கள் தொலைக்காட்சிகள், பெரிய திரைகள் மூலம் நேரலையில் போட்டியை கண்டு ரசித்தனர்.


மகளிர் உலகக் கோப்பை கால்பந்து தொடர் கடந்த 1991ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. 32 ஆண்டு கால வரலாற்றில் அதிகப்பட்சமாக அமெரிக்கா 4 முறையும் ஜெர்மனி 2 முறையும் நார்வே மற்றும் ஜப்பான் அணிகள் தலா ஒருமுறையும் கோப்பையை வென்றுள்ளன.


தற்போது இந்த வெற்றியின் மூலம் இந்த பட்டியலில் 5வது நாடாக ஸ்பெயின் இணைந்துள்ளது.

No comments

Powered by Blogger.