Header Ads



வாக்னர் படைத் தலைவர் உயிரிழப்பு

 
வாக்னர் படைத் தலைவர் பிரிகோஜின் விமான விபத்தில் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.


 10 பேர் சென்ற ஜெட் விமானத்தில் வாக்னர் படைத்தலைவர் பயணம் செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.


ட்வெர் பிராந்தியத்தில் நடந்த விமான விபத்தில் இறந்தவர்களில் வாக்னர் குழு தலைவர் யெவ்ஜெனி பிரிகோஜினும் அடங்கியுள்ளார்.


ரஷ்ய அரசின் விமானப் போக்குவரத்து நிறுவனமான ரோசாவியாட்சியா யெவ்ஜெனி பிரிகோஜின் இறந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.


ரஷ்ய அரசு செய்தி நிறுவனமான RIA நோவோஸ்டியின் தகவலின்படி, விபத்து நடந்த இடத்தில் எட்டு உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.


பிரிகோஜின் சென்ற விமானம் ரஷ்யாவில் விபத்துக்குள்ளானது குறித்து வெளியான செய்தியால் தாம் ஆச்சரியப்படவில்லை என்று அமெரிக்க அதிபர் பைடன் தெரிவித்துள்ளார்.


இந்த சம்பவத்திற்கு விளாடிமிர் புடின் தான் பொறுப்பு என்று நினைக்கிறீர்களா என்று நெவாடாவில் நிருபர்கள் கேட்டதற்கு, "ரஷ்யாவில் புடின் பின்தங்கியிருக்காத அளவுக்கு எதுவும் நடக்கவில்லை."என்று தெரிவித்தார்.


No comments

Powered by Blogger.