அவுஸ்திரேலியாவில் இலங்கையர் எடுத்துள்ள முயற்சி
அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கையர் ஒருவர் தனி நடை பயணத்தை ஆரம்பித்துள்ளார்.
நாட்டில் அகதிகளாக தங்கியுள்ள அனைத்து மக்களுக்கும் நிரந்தர வதிவிடத்தை வழங்குமாறு அதிகாரிகளை வலியுறுத்தி, ஏறக்குறைய 1000 கிலோமீற்றர் தூரமுடைய இந்த நடை பயணத்தை இன்று(01.08.2023) ஆரம்பித்துள்ளார்.
நீல் பாரா என்ற இலங்கையரே இந்த நடை பயணத்தை ஆரம்பித்துள்ளார்.
அவர் Ballarat என்ற இடத்திலிருந்து சிட்னியில் உள்ள பிரதமர் தேர்தல் அலுவலகம் வரை நடைபயணம் மேற்கொள்ளவுள்ளார்.
இதேவேளை அவர் 8 வருடங்களாக விசா ஏதும் இன்றி நாட்டில் தங்கியிருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நாளொன்றுக்கு சுமார் 30 கிலோமீற்றர் தூரம் பயணித்து எதிர்வரும் செப்டெம்பர் 09ஆம் திகதி பிரதமரிடம் தனது கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை வழங்க அவர் திட்டமிட்டுள்ளார்.
Post a Comment