Header Ads



பச்சை குத்துபவர்களுக்கு எச்சரிக்கை - உங்களின் இரத்தமும் வேண்டாமென்கிறார்கள் வைத்தியர்கள்


இதன் காரணமாக பச்சை குத்தியவர்களிடம் இருந்து இனி இரத்த தானம்  பெற்றுக்கொள்ளப்பட மாட்டாது என தேசிய இரத்த மாற்று சேவையின் பணிப்பாளர் வைத்தியர் லக்ஸ்மன் எதிரிசிங்க கூறியுள்ளார்.


இந்த நாட்டில் உள்ள பெரும்பாலான பச்சை குத்தும் மையங்கள் வழங்கப்பட்டுள்ள பரிந்துரைகளை பின்பற்றாததால் ஆபத்து மேலும் தீவிரமடைவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.


மேலும், 


இரத்த தானம் செய்பவரின் இரத்தம் கூறுகளாக பிரிக்கப்படுவதால், இரத்தம் பெறுபவர்களின் உயிருக்கு தேவையற்ற ஆபத்துக்களை ஏற்படுத்த வேண்டாம் எனவும் தேசிய இரத்தமாற்ற சேவை தீர்மானித்துள்ளதாக வலியுறுத்தியுள்ளார்.


இதற்கமைய, பச்சை குத்துதல், தோல் குத்துதல் போன்ற செயல்களைச் செய்பவர்கள், ஒரு வருடத்திற்கு இரத்த தானம் செய்பவர்களாகத் தொடர்பு கொள்ளப்பட மாட்டார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுளள்து. 

No comments

Powered by Blogger.