Header Ads



சவுதி கிளப்பில் நெய்மர், விற்றுத் தீர்ந்த ஜெர்சிகள்


பிரேசில் கால்பந்து அணி வீரரும், உலகின் முன்னணி கால்பந்து வீரர்களில் ஒருவருமான நெய்மர், அல்-ஹிலால் கால்பந்து கிளப் அணியில் இணைந்துள்ளார்.


இதுதொடர்பான தகவல் சவுதி அரேபியாவைச் சேர்ந்த செய்தி நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளது.


2023ஆம் ஆண்டு முதல் 2025ஆம் ஆண்டு வரை அல்-ஹிலால் கால்பந்து அணிக்காக நெய்மர் விளையாடுவார் என்று அந்த செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.


இந்த நிலையில் அவர் அல்-ஹிலால் அணியில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார். ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டுள்ளார்.


ஏற்கெனவே சவுதி அரேபியாவில் உள்ள பிரபல கால்பந்து கிளப்களில் உலகின் முன்னணி கால்பந்து வீரர்களான கிறிஸ்டியானா ரொனால்டோ (போர்த்துக்கல்), கரீம் பென்செமா (பிரான்ஸ்) ஆகியோர் இணைந்துள்ளனர். அந்த வரிசையில் தற்போது நெய்மரும் சேர்ந்துள்ளார்.


அவரது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான 7 மணி நேரத்திற்குள் சுமார் 10இ000 நெய்மர் அல் ஹிலால் எஃப்சி ஜெர்சிகள் ஏற்கனவே ப்ளூ ஸ்டோர் ஆன்லைன் மூலம் விற்கப்பட்டுள்ளன.


அத்துடன் அவரது உருவம் பொறிக்கப்பட்ட ஜெர்சிகள் வாங்க மக்கள் பல கடைகளில் கூடிநிற்பதை காட்டும் புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.


No comments

Powered by Blogger.