யார் மனதும் காயப்பட்டிருந்தால் மன்னிப்பு கேட்கிறேன்
தேசிய கீதத்தை திரிபுபடுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பாடகி உமாரா சிங்கவன்ச மன்னிப்புக்கோரியுள்ளார். தேசிய கீத விவகாரம் தொடர்பில் அவர் தனது சமூக வலைத்தள கணக்கில் பதிவொன்றினையிட்டு மன்னிப்புக்கோரியுள்ளார்.
ஸ்ரீலங்கா பிரீமியர் லீக் ஆரம்பத்தின் போது தேசிய கீதத்தை பாடிய விதத்தில் தான் கவனம் செலுத்தியதாகவும் பாடகி உமாரா சின்ஹவன்ச குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், நேர்ந்த தவறினால், யார் மனதேனும் காயப்பட்டாலோ அல்லது புண்படுத்தப்பட்டிருந்தாலோ அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.
பாடகி உமாராவின் இந்த மன்னிப்பை ஏற்றுக் கொண்டு அரசாங்கம் தேவையில்லாத வேலையை முன்னெடுத்து மக்களின் நேர காலங்களை வீணாக்காமல் தேவையற்ற விடயத்தில் வழக்குத் தொடருவதை உடனடியாக நிறுத்த வேண்டும். நாட்டுச் சொத்துக்களை களவாடி, நாட்டை படுகுழியில் தள்ளிய எத்தனையோ பேர் சுதந்திரமாகச் சுற்றுத்திரிந்து கொண்டிருக்கும் போது தேவையற்ற விடயங்களில் நேர காலங்களை வீண்டிக்கும் வேலைகளை அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும்.
ReplyDelete