இன்றும் கஜேந்திரகுமார் வீட்டின் முன் போராட்டம் - பெருமளவு இராணுவத்தினர் குவிப்பு
நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கொழும்பு இல்லத்தின் முன்பாக பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.
இன்றைய தினமும் -26- கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கொழும்பு இல்லத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் அவர் இதனை பதிவிட்டுள்ளார்.
இதேவேளை அந்த பகுதியில் பெருமளவு இராணுவத்தினரும் பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Post a Comment