Header Ads



கோழி இறைச்சி பிரியர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்


விவசாய அமைச்சர் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் விலையை 100 ரூபாவால் குறைக்க கோழி இறைச்சி வர்த்தகர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.


மக்காச்சோள இறக்குமதி வரியை ஒரு கிலோவுக்கு 75 ரூபாவில் இருந்து 25 ரூபாவாக அரசாங்கம் குறைத்ததன் பயனை நுகர்வோருக்கு வழங்குவதே இதன் நோக்கமாகும்.


மேலும், டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி அதிகரிக்கும் பட்சத்தில் நுகர்வோருக்கு அதன் அனுகூலத்தை வழங்குவதற்கும் இதன்போது இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இலங்கையில் கோழி இறைச்சியின் வருடாந்த தனிநபர் நுகர்வு 11 கிலோவாகவும், முட்டையின் வருடாந்த தனிநபர் நுகர்வு 138 கிலோவாகவும் அதிகரித்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.