Header Ads



சட்டத்தை எவரேனும் கையில் எடுத்து செயற்பட்டால்..?


சட்டத்தை எவரேனும் கையில் எடுத்து செயற்பட்டால், அவர்களுக்கு எதிராக அந்தஸ்து பாராமல் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.


அறிக்கை ஒன்றின் மூலம் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.


கடந்த ஞாயிற்றுக்கிழமை தோட்ட பகுதியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் மக்களை தூண்டும் வகையில் மக்கள் பிரதிநிதியொருவர் பொறுப்பற்ற முறையில் கருத்து தெரிவித்ததாக சுட்டிகாட்டியுள்ளார்.


இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.#

தற்காப்புக்காக வன்முறைக்கு பதிலடி கொடுக்க வேண்டும் எனவும் அரசாங்கமும் சட்டமும் எம்மை பாதுகாக்காது போனால் அது எமது உரிமை எனவும் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.


இவ்வாறான வெறுப்பூட்டும் பேச்சுக்களுக்கு பலியாகி, சட்டத்தை கையில் எடுக்க வேண்டாம் என பெருந்தோட்டம் உட்பட ஒட்டுமொத்த மக்களையும் கேட்டுக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.