Header Ads



வடக்கில் சாதிப் பிரச்சினைகள் வளர்ந்து வருகிறது


இலங்கையின் வடக்கு கிழக்கு வாழ் மக்களும், அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இரு வேறு நிலைப்பாடுகளில் இருப்பதாக  நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.


யாழ்ப்பாணத்துக்கு தாம் அண்மையில் பயணம் செய்ததாகவும், இதன் போது அங்குள்ள மக்கள் தமிழ் அரசியல்வாதிகள் குறித்து கொண்டிருக்கும் நிலைப்பாடுகளை தனிப்பட்ட ரீதியில் உணர்ந்து கொண்டதாகவும், ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் குறிப்பிட்டுள்ளார்.


வடக்கில் ஆயுத போராட்டத்தை ஆரம்பித்தது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அல்ல எனவும் அவருக்கு முன் இருந்த சில தரப்பினர் அதனை ஆரம்பித்து வைத்ததாகவும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார்.


அத்துடன், சிங்கள மக்களை கொலை செய்வதற்காக பிரபாகரன் பிறக்கவில்லை எனவும் வடக்கில் காணப்பட்ட அதிகார பிரச்சினைகளை தீர்ப்பதற்காகவே அவர் முன்வந்தார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


வடக்கில் காணப்படும் சாதி பிரச்சினைகள் வளர்ந்து வரும் பிரச்சினை என்பதை சுட்டிக்காட்டிய விஜயதாச ராஜபக்ச, அதனை இல்லாது செய்வதன் மூலம் பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியுமெனவும் கூறியுள்ளார்.


இதேவேளை, இலங்கையில் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான தமிழ் மக்களின் உண்மையான நிலைப்பாட்டை தாம் அறிந்திருந்தாலும், தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைக்கமைய செயற்பட வேண்டியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.   

No comments

Powered by Blogger.