அரசாங்கத்திற்கு டயானாவின் பரிந்துரை
இலங்கை மதுவரித் திணைக்களம் தற்போது நட்டத்தை சந்தித்து வருவதாக சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
மதுபான விலை அதிகரிப்பு காரணமாக பொது மக்களிடையே சட்டவிரோத மதுபாவனை அதிகரித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
விலை அதிகரிப்பானது சுற்றுலாத்துறைக்கு பாதகமான விளைவை ஏற்படுத்தியுள்ளதன் காரணமாக மதுபானத்தின் விலையை குறைக்குமாறு அரசாங்கத்திற்கு பரிந்துரை செய்வதாகவும் சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே வலியுறுத்தியுள்ளார்.
மதுபான போத்தல் ஒன்றின் விலை 300 ரூபாவினாலும் பியர் போத்தல் ஒன்றின் விலை 50 ரூபாவினாலும் கடந்த ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் அதிகரிக்கப்பட்டது.
மதுவரி அதிகரிக்கப்பட்ட நிலையில் இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டதாக இலங்கை மதுவரித் திணைக்களம் தெரிவித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
கஞ்சா நோநாவுக்கு இந்த நாட்டில் அவசியமானது மூன்று விடயங்கள் தான். மருத்துவ நோக்கம் என்ற பெயரில் கஞ்சா உற்பத்தியை நாடு முழுக்க மேற் கொள்ள அனுமதிவழங்குவது, இரவு முழுவதும் கடைகளைத் திறந்து வியாபாரம் நடைபெறும் பெயரில் விபசாரத்தை எந்த வரையறைகளுமின்றி நாடு முழுவதும் அனுமதிப்பது, மதுபானம் சார்ந்த உற்பத்திகளை சரளமாக யாரும் நுகரும் வகையில் அதன் விலைகளைக் குறைப்பது. இந்த மூன்று விடயங்களையும் நாடுமுழுவதும் பரப்பி எல்லா மூலை முடுக்குகளிலும் கஞ்சா, விபசாரம், மதுபானம் கிடைக்க வழிவகை செய்வது. இலவச டிக்கட் மூலம் பாராளுமன்றம் நுழைந்து இந்த நாட்டு மக்களின் சுமுகமான வாழ்க்கையைக் குழப்பியடிக்கும் இந்த பிரிடிஷ் குடியாளனை உடனடியாக அமுலுக்கு வரும்வகையில் இந்த நாட்டிலிருநது துரத்தியடிக்க வேண்டும். இது இந்த நாட்டு பொதுமக்களின் கடமை என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும்.
ReplyDelete