Header Ads



தொழிலாளர்களுக்கு அதிரடிச் சலுகைகளை, அறிவித்துள்ள ஓமான் (முழு விபரம்)


ஓமானில் நடைமுறையில் இருந்து வரும் தொழிலாளர் சட்டங்களில் திருத்தம் செய்யப்பட்டு தொழிலாளர்களுக்கு சாதகமாக பல்வேறு அம்சங்கள் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளன.


அதிகமான இலங்கையர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்கள், பணிபுரிந்து வரும் வளைகுடா நாடாக ஓமான் காணப்படுகின்றது.


இந்நிலையில் தற்போது மாற்றி அமைக்கப்பட்டுள்ள சட்டங்களால் இவர்கள் பெருமளவிலான நன்மைகளை பெற வாய்ப்புள்ளது.


அவ்வாறான சட்டங்கள் என்னவென்று இப்பதிவின் மூலமாக பார்க்கலாம்.


முதலாவதாக ஓமன் நாட்டில் உள்ள நிறுவனங்களில் உள்நாட்டு குடிமக்களுக்கே வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.


நிறுவனத்தில் பணிபுரியும் ஓமன் மக்களின் எண்ணிக்கையை இணையத்தில் வெளியிட வேண்டும். ஓமன் தொழிலாளர்கள் எண்ணிக்கை, ஊதியம் உள்ளிட்ட தகவல்கள் அதில் இடம்பெற்று இருக்க வேண்டும். காலிப் பணியிடங்களை இணையதளத்தில் வெளியிட வேண்டும்.


உயர் பதவிகளில் ஓமன் நாட்டவர்களே அமர்த்தப்பட வேண்டும். உயர் பொறுப்புகளை கையாள்வதற்கு தேவையான பயிற்சிகளும் அளிக்கப்பட வேண்டும்.


பெண் தொழிலாளர்களுக்கு குழந்தை பராமரிப்புக்காக தினமும் ஒரு மணி நேரத்தை ஒதுக்கலாம். 98 நாட்கள் ஊதியத்துடன் மகப்பேறு விடுப்பும், குழந்தை பராமரிப்புக்காக ஓராண்டு வரை ஊதியம் இல்லாத விடுப்பையும் எடுக்கலாம்.


மனைவிக்கு பக்கபலமாக இருக்கும் வகையில் ஆண்களுக்கு ஏழு நாள் மகப்பேறு விடுப்பு எடுக்க அனுமதி. குடும்பத்தில் நோயாளிகள் யாரேனும் இருந்தால் அவர்களை பராமரிக்க 15 நாட்கள் விடுப்பு எடுக்க முடியும். அதேபோல் மருத்துவ விடுப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு உள்ளது. 


25 க்கும் அதிகமான பெண் தொழிலாளர்கள் இருந்தால் அவர்களுக்கென தனி ஓய்வு இடத்தை ஒதுக்க வேண்டும்.


பகுதி நேர வேலைகள், பிரீலான்ஸ் பணிகளை மேற்கொள்ள செய்ய அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.


எதிர்பார்த்த அளவுக்கு ஒரு தொழிலாளி வேலை செய்யாவிட்டால் அவர்களை வேலையில் இருந்து நீக்க முதலாளிக்கு சட்டம் அனுமதியளித்து உள்ளது. ஆனால், எந்த இடத்தில் சரியாக செயல்படவில்லை என்பதை சொல்லி 6 மாத காலம் அவருக்கு அவகாசம் வழங்கலாம். வேலையையிலிருந்து நீக்கப்பட்ட 30 நாட்களுக்குள் புகாரளிக்கலாம்.


ஓமன் நாட்டினருக்கான இடங்களை நிரப்பாமல் வெளிநாட்டினரை பணி அமர்த்தினால், அவர்களை நீக்க சட்டம் அனுமதி அளித்து உள்ளது.


தொழிலாளர்களின் திறன், செயல்பாடுகளை மதிப்பிட, செயல்திறன் மதிப்பீட்டு முறையை அமைக்க வேண்டும்.


தொழிலாளி கோரிக்கை விடுத்தால் ஊதியம் இல்லாமல் சிறப்பு விடுப்பு வழங்கலாம். 6 மாதம் வேலை செய்தபின் குறைந்தபட்சம் 30 நாட்கள் வருடாந்திர விடுமுறை அளிக்கப்பட வேண்டும்.


சரியான காரணங்களுடன் இரவு நேரங்களில் பணிபுரிய முடியாது என்பதை நிரூபித்தால் பகலில் பணிபுரிய அனுமதிக்கலாம். ஓய்வு நேரத்தை கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் தினமும் 8 மணி நேரம் வேலை செய்ய வேண்டும்.


தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் உரிமைகளில் பாரபட்சம் காட்டப்படக் கூடாது. அவர்களுக்கு முறையான வேலையை ஒதுக்கீடு செய்திட வேண்டும். பணியின் தன்மைக்கு ஏற்ப அதை பிரித்து கொடுக்க வேண்டும்.


வெளிநாட்டு தொழிலாளர்கள் விடுமுறை முடிந்து சொந்த நாட்டில் இருந்து திரும்பி வருவதற்கான விமான டிக்கெட் செலவுகளை பார்த்துக்கொள்ள வேண்டும். பணி சார்ந்த விடுமுறைகளின்போது விமான டிக்கெட் செலவை நிறுவனங்களே ஏற்க வேண்டும்.  

No comments

Powered by Blogger.