Header Ads



ஏன் இவரின் ஜனாஸா நல்லடக்கத்தில், வரலாறு காணாத மக்கள் திரள்...?



யார் இந்த அசாம்? 


ஏன் இவரின் ஜனாஸா நல்லடக்கத்தில்  வரலாறு காணாத மக்கள் திரள்...


எங்கிலும் அவனுடைய மரணச் செய்தி,  எண்ணற்ற தாய்மார்களது மாணவர்களது அலறல். 


அந்த கல கல சிரிப்பும், கர கர குரலும், கொழு கொழு உடம்பும், Humour sense உம் அவனுக்கே தனித்துவமானவை.  


அவனது சாயலில் கூட வேறோருவரை கண்டதில்லை நாம். அதனாலோ என்னவோ யாராலும் அவனது மரணத்தை ஏற்கவோ அந்த இடைவெளியை நிரப்பவோ முடியவில்லை.


பழகிய ஒருவரைக்கூட அவன் சிரிக்க வைக்கத் தவறியதில்லை. எந்த நேரத்திலும் யாருடைய உதவிக்கான அழைப்பையும் ஏற்க மறுத்ததுமில்லை.


அதிக பல்கலைக்கழக மற்றும் கல்வியற் கல்லூரி நுழைவுகளைக் கொண்ட எங்கள் Batch இல் முதல் அரச உத்தியோகத்தை பெற்ற மாணவன் அவன். யாருடைய கண்பட்டதோ முழுமையாக ஒருமாத சம்பளத்தை மாத்திரமே பெற முடிந்தது.


ஒரு சிறந்த பிள்ளையாக, சிறந்த நண்பனாக, சிறந்த ஆசிரியராக எல்லாவற்றிலும் சிறந்து விளங்கிய ஒருவரை இந்த சமூகம் இழந்துவிட்டது.


அந்த தாயின் அழுகுரலிலும் தகப்பனின் தடுமாற்றத்திலும் சகோதரியின் ஏக்கத்திலும் தெரிந்தது அவனது இழப்பின் பாரதூரம்.


பத்துத் திங்கள் கருவிலும் இருபத்தைந்து வருடங்கள் இதயத்திலும் சுமந்து ஒரே நேர்கோட்டில் வளர்த்த தாய். தனது மகன் ஒட்டு மொத்த பொருளாதார சூழ்நிலைகளையும் சரி செய்வான் என்ற அவா. எல்லாம் கானல் நீராகி விட்டது.


எல்லாம் மாறும், எல்லாம் மறக்கும். கடந்த வாரம் ஒரு சகோதரியின் மரணம், இன்று எனது நண்பனின் மரணம், அடுத்த வாரம் இன்னொரு சேதி. எல்லாம் கடந்து போய்விடும். இழப்பு அந்தந்த குடும்பத்திற்கே நிரந்தரம்.


ஒவ்வொரு மரணமும் ஆயிரம் படிப்பினை. ஆனால் தாக்கமோ ஓரிரு நாட்களுடன் முற்று. இனியாவது மரணத்தை எதிர்பார்த்திருப்போம். எந்த நேரத்திலும் எந்நிலையிலும் மரணம் எம்மை சுவைத்திடலாம். 


எந்நேரத்திலும் இறுதி தொழுகையை நிறைவேற்றியவர்களாக இருப்போம், 


மரணத்தின் பின்னரே நாம் அதிகமாக தேடப்படுகிறோம். எனவே நாம் யாவற்றை விட்டுச் செல்கின்றோமோ அது ஒரு எழுத்தாக இருந்தாலும் சரி, ஒரு குரல் பதிவாக இருந்தாலும் சரி, அவை கண்ணியமானதாக இருக்கட்டும். 


உயிர்நீர்த்த நண்பனுக்காகவும், உயிர்ப்பலி கொடுத்த அவனது உடமைகளுக்காகவும் வைத்தியசாலையில் உயிருக்காக போராடிக்கொண்டிருக்கின்ற இன்னொரு நண்பனுக்காகவும் பிரார்த்திப்போம். இன்ஷா அல்லாஹ்.


நீ தேடிய நிரந்தர செல்வங்களை எண்ணி பொறாமை கொள்கிறோம் நண்பா..!


இப்படிக்கு உனது தோழமை.


(Ifthi)


No comments

Powered by Blogger.