புகையிரதம் பல தடவைகள் ஹார்ன் அடித்தும், கைப்பேசியில் பேசியபடி வந்த யுவதி உயிரிழப்பு
ரயில் பாதையில் கைப்பேசியில் பேசிக்கொண்டு நடந்து சென்ற யுவதி ஒருவர் ரயிலில் மோதி உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதகா தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாணந்துறைக்கும் பின்வத்தைக்கும் இடைப்பட்ட பகுதியில் நேற்று (28) இரவு 07:00 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தில் படுகாயமடைந்த யுவதி அதே ரயிலில் ரயில் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு நோயாளர் காவு வண்டி மூலம் பாணந்துறை ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 22 வயது மதிக்கத்தக்க யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் பல தடவைகள் ஹார்ன் அடித்த போதும் உயிரிழந்த யுவதிக்கு கேட்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
Post a Comment