மோசமான சம்பங்களுக்கு இவர்கள்தான் காரணம்
இவ்வாறான நிலைமைகளை கட்டுப்படுத்துவதற்கு கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
கம்பஹா பிரதேசத்தில் வைத்து நேற்று(13) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
"போதைப்பொருள் தொடர்பில் தமக்குக் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் நாளாந்தம் சோதனைகளை நடத்தி அவற்றை விற்பனை செய்து விநியோகம் செய்பவர்களை பொலிஸார் கைது செய்கின்றனர்.
பொதுமக்களின் ஆதரவுடன் எதிர்காலத்தில் அந்த நடவடிக்கைகளை தீவிரப்படுத்த நாங்கள் பணியாற்றி வருகிறோம்.
போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளவர்களே சமூகத்தில் நடக்கின்ற மோசமான சம்பங்களுக்கு காரணமாக இருக்கின்றனர்.
திருட்டுகள், வழிப்பறிகள், கொள்ளைகள், கார் திருட்டுகள் மற்றும் வீட்டில் நடக்கும் குடும்ப வன்முறைகள் கூட போதைப் பழக்கத்தினால் ஏற்படுகின்றன.” என்றார்.
இலங்கையில் போதைப் பொருள்களைப் பாவிக்கும் நபர்களைத் தடை செய்ய முன்பு தியவன்னாவையில் உள்ள குறைந்த பட்சம் 150 மேற்பட்ட போதைப் பொருள் இறக்குமதி, கடத்தலில் ஈடுபடும் மந்திகள் இருக்கின்றனர். அவர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தினால் நாட்டில் போதைப் பொருள் பாவனையை இலகுவாக கட்டுப்படுத்தலாம். இது தவிர அங்குமிங்கும் பஞ்சத்துக்கு போதைப் பொருளுக்கு அடிமையான நபர்களைக் கைது செய்வதால் எந்தப் பயனுமில்லை.
ReplyDelete