Header Ads



இரண்டு வார கால அவகாசம்


உலகக் கிண்ண தொடருக்கான உடற்தகுதியை நிரூபிப்பதற்கு நியூசிலாந்து அணித் தலைவர் கேன் வில்லியம்சனுக்கு இரண்டு வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக அதன் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.


இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் போது, அவரது முழங்காலில் காயம் ஏற்பட்டிருந்தது.


இந்தநிலையில், அவர் தற்போது, காயத்தில் இருந்து மீண்டுவருவதுடன், நியூசிலாந்து அணியுடன் இணைந்து பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.


இந்த நிலையில், உலகக் கிண்ண தொடருக்கான அணியில் இடம்பெறுவதற்கு வில்லியம்சனுக்கு போதிய வாய்ப்புகள் வழங்கப்படும் என்று நியூசிலாந்து பயிற்சியாளர் கேரி ஸ்டெட் தெரிவித்துள்ளார்.


15 பேர் கொண்ட குழாம் குறித்த விபரங்களை செப்டம்பர் 5ம் திகதிக்குள் சர்வதேச கிரிக்கட் பேரவையிடம் கையளிக்க வேண்டும்.


அதே சமயம், செப்டம்பர் 28 வரை அணியில் மாற்றங்கள் செய்வதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.


வில்லியம்சன், முழு உடற்தகுதியை எட்டாவிட்டாலும் உலகக் கிண்ண நியூசிலாந்து அணியில் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


மாற்று வீரர்களில் ஒருவராக வில்லியம்சன் அணியில் சேர்க்கப்படவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.


இந்த நிலையில் வில்லியம்சனின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டே முடிவுகள் எடுக்கப்படும் என்று கேரி ஸ்டெட் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.