Header Ads



மைதானத்தில் இறங்கிய மகிந்த - விருதுகளை வென்ற அரசியல்வாதிகளின் விபரம்


நுவரெலியா நகரசபை விளையாட்டு மைதானத்தில் மகிந்த ராஜபக்ச சவால் செம்பியன்ஷிப் கிரிக்கெட் சுற்றுப் போட்டி நடைபெற்றது.


இந்த கிரிக்கெட் சுற்றுப் போட்டி, நாடாளுமன்ற உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் இன்று(12.08.2023) இடம்பெற்றது.


குறித்த கிரிக்கெட் சுற்றுப்போட்டி, முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மகிந்த ராஜபக்ச தலைமையில் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும்.


இந்த போட்டியில் மகிந்த ராஜபக்ச, நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபட, நுவரெலியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அனுருத்த ஹக்மன, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் இரண்டு போட்டிகள் இடம்பெற்றதுடன் இரண்டு போட்டிகளிலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணி வெற்றி பெற்றது.


போட்டியின் நாயகனாக நாடாளுமன்ற உறுப்பினர் கயாஷானும், சிறந்த களத்தடுப்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் சி.பி.ரத்நாயக்கவும், சிறந்த துடுப்பாட்ட வீரராக நாடாளுமன்ற உறுப்பினர் டபிள்யூ.டி.வீரசிங்கவும், சிறந்த பந்துவீச்சாளராக பிரேமலால் ஜயசேகரவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.