நாட்டில் சிறப்பு வாய்ந்த, நரிகளுக்கு பற்றாக்குறை
வசிப்பிட இழப்பு, உணவு கிடைக்காதது, நாட்டின் வீதி வலையமைப்பு விரிவாக்கம் ஆகியனவே நாட்டில் நரிகளின் எண்ணிக்கை குறைவதற்கு முக்கியக் காரணம் என இந்த ஆய்வு உறுதி செய்துள்ளது.
ஏனைய பாலூட்டிகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் உள்ள நரிகள் சிறப்பு வாய்ந்தவை எனவும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
“ இலங்கை நரிகள் மற்ற பாலூட்டிகளைப் போல் இல்லை, அது ஒரு பறவையைப் போல தன்மை கொண்டது. அதே போல அழவும் செய்யும். இலங்கையில் இவ்வாறான நடத்தைகளை கொண்ட ம் மற்றுமொரு பாலூட்டி கருங்குரங்கு மட்டுமே என இந்த ஆராய்ச்சியின் மேற்பார்வை அதிகாரியான கொழும்பு பல்கலைக்கழகத்தின் விலங்கியல் நிபுணர் பேராசிரியர் சம்பத் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
இந்த விலங்கின் பதின்மூன்று கிளையினங்கள் உலகம் முழுவதும் காணப்படுகின்றன . இதன்படி யால, உடவலவ, வில்பத்து, குமண, வஸ்கமுவ போன்ற தேசிய பூங்காக்களில் அதிகளவான குள்ளநரிகள் இருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வகையான பெரும்பாலான நரிகள் தியவன்னாவையில் வீணாகக் கூடிக் கலைகின்றன. அவை கலையும் போது பத்து லொறிகளை அங்கு நிறுத்திவைத்திருந்தால் அவற்றைப் பிடித்து மிருகக் காட்சிசாலையில் அடைத்து புண்ணாக்கையும் நீரையும் கொடுத்து வளர்த்தால் நாட்டில் தட்டுப்பாடான நரிகளுக்குத் தீர்வு காணலாம்.
ReplyDelete