Header Ads



பம்பலப்பிட்டியில் பேருந்து விபத்து


பம்பலப்பிட்டியில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளான சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.


பம்பலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்க்குட்பட்ட டூப்ளிகேஷன் வீதிக்கு அருகில் இன்று (14) அதிகாலை இந்த விபத்து இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


கொழும்பில் இருந்து கதிர்காமம் நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று தும்முல்லயிலிருந்து வந்த லொறியுடன் மோதி வீதியில் கவிழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


விபத்தின் போது பேருந்தில் சுமார் 15 பயணிகள் இருந்ததோடு இரண்டு பெண்கள் மற்றும் ஐந்து ஆண்கள் காயமடைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.


இவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


மின்விளக்கு இன்றி பேருந்து இயங்கியதாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. 

No comments

Powered by Blogger.