ரணிலுடன் இணைவாரா மைத்திரி..?
ஜனாதிபதி ரணில் தலைமையிலான அரசுடன் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணையவுள்ளதாக வெளியாகிவரும் தகவல்களை அவர் நிராகரித்துள்ளார்.
சுதந்திர மக்கள் சபையின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவுக்கும், மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையிலான சந்திப்பொன்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது அரசுடன் இணையவுள்ளீர்களா என டலஸ், எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே, தனக்கு அவ்வாறானதொரு எண்ணம் இல்லை எனவும், போலியான தகவல்களே பரப்பட்டு வருகின்றன எனவும் மைத்திரி பதிலளித்துள்ளார் என அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
பல வருட அனுபவம் கொண்ட இரண்டு மாபெரும் கள்வர்கள் அரசியலில் தத்தமது குறுகிய நோக்கங்களை அடைந்து கொள்ள ஒன்றிணைவது எதுவும் ஒரு புதிய விடயமல்ல. அவர்களின் அரசியல் பதவிகளையும் தக்கவைத்துக் கொள்வதற்காக எதையும் செய்யத் துணியும் இது போன்ற புல்லுருவிகளை இந்த நாட்டு மக்கள் சரியாக அடையாளம் கண்டு அவர்களுக்கு ஏற்ற பதில் அளிக்க பொதுமக்கள் இப்போதே தயாராக வேண்டும்.
ReplyDelete