விலை குறையவுள்ள கோழி இறைச்சியும், முட்டையும்
எதிர்காலத்தில் ஒரு கிலோ கோழி இறைச்சியை 1200 ரூபாவிற்கு விற்பனை செய்ய முடியும் என கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
மக்காச்சோளத்திற்கான இறக்குமதி வரியை குறைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளமையால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.
இரண்டு வாரங்களுக்குள் மக்காச்சோளத்தை இறக்குமதி செய்ய வாய்ப்பு உள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.
இந்த சலுகைகள் மூலம் எதிர்காலத்தில் ஒரு முட்டையை 40 ரூபாவிற்கு விற்பனை செய்ய முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
18.75% சோளத்தின் இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளது அதாவது கிலோ சோளத்துக்கு 75 ரூபாவிலிருந்து 25 ரூபாவாக குறைக்கப்பட்டால் கோழியிறைச்சியின் விலை 1540 ரூபாவிலிருந்து 1000 ரூபாவுக்கு இலகுவாகக் குறைக்கலாம். ஏனெனில் கோழித்தீனின் மிக முக்கிய பகுதி சோளமாகும். முட்டையின் விலையை 35 ரூபாவுக்கு இலாபத்துடன் விற்பனை செய்யலாம். இந்தியன் முட்டைகளை இறக்குமதி செய்தவர்களின் வீடுகளுக்கு அனுப்பி அவர்களை இந்திய முட்டையில் குளிக்கவைக்கலாம். அந்த முட்டைகள் எந்த காரணம் கொண்டும் பொதுமக்களுக்குத் தேவையில்லை.
ReplyDelete