நாட்டில் எந்தக் கட்சிக்கு, மக்களிடத்தில் அதிக ஆதரவுள்ளது..?
சுகாதார கொள்கை நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பின் அடிப்படையில், ஜூன் மாதத்தை விட ஜூலை மாதத்தில் ஐக்கிய மக்கள் சக்திக்கு மக்கள் மத்தியில் ஆதரவு அதிகரித்துள்ளது.
அதன்படையில், ஐக்கிய மக்கள் சக்திக்கு 24 சதவீதமான மக்களின் ஆதரவு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 23 சதவீதமான மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு வழங்கியுள்ளனர்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு 9 வீதமும், ஐக்கிய தேசியக் கட்சிக்கு 8 வீதமும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு 3 வீதமும் என்ற அடிப்படையில் மக்களின் ஆதரவு இருப்பதாக சுகாதார கொள்கை நிறுவனத்தின் கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.
மேலும், 30 வீதம் வாக்காளர்கள் எந்த கட்சிக்கும் ஆதரவளிக்கவில்லை எனவும் கருத்து கணிப்பில் கூறியுள்ளனர்.
கட்சிகளுக்கு ஆதரவில்லை என்ற நிலைப்பாடு மக்கள் மத்தியில் அனைத்து கட்சிகள் தொடர்பிலும் அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment