கூட்டமாக வந்த யானைகளினால் இழுத்து மூடப்பட்ட பாடசாலை - மாணவர்களும் வெளியேற்றம்
ஆராச்சிக்கட்டு குருக்குளிய பிரதேச பாடசாலைக்கு அருகில் காட்டு யானைகள் கூட்டமாக வந்ததன் காரணமாக பாடசாலை மூடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு இன்று (31) ஆறு காட்டு யானைகள் வந்ததன் காரணமாக இவ்வாறு மூடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலைக்கு வருகை தந்த மாணவர்களை கிராமவாசிகளும் ஆசிரியர்களும் பாதுகாப்பாக அழைத்துச் சென்று பெற்றோரிடம் ஒப்படைத்ததாக ஆசிரியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மாணவர்களின் பாதுகாப்பு கருதி இன்று பாடசாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக ஆசிரியர் தெரிவித்துள்ளார்.
வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொலிஸார் இணைந்து அப்பகுதி மக்களின் உதவியுடன் காட்டு யானைகளை விரட்ட நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Post a Comment