இரவுப் பொருளாதாரம் என்றால் என்ன..?
சில வருடங்களுக்கு முன்னதாக இலங்கையில் கசினோக்களை ஆரம்பிக்க முதலீட்டாளர் ஜேம்ஸ் பக்கர் ஆர்வம் காட்டிய போது, அவரை அனுமதித்திருந்தால் இலங்கையின் பொருளாதாரம் இன்று இருக்கும் நிலைக்கு வந்திருக்காது என இராஜாங்க அமைச்சர் டயானா கமகே நேற்று (09) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
“பக்கருக்கு எதிராக அப்போது மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் செய்தனர். யார் பக்கரை எதிர்த்தனர் யார் எதிர்க்கவில்லை என்பது இப்போது அவசியமில்லை. தற்போது நாட்டின் நிலை என்ன என்பது தான் முக்கியம்” என அவர் மேலும் தெரிவித்தார்.
இரவுப் பொருளாதாரத்தை மேம்படுத்துவது இலங்கையை அபிவிருத்தியடைந்த நாடாக மாற்ற மிக முக்கியமானது என டயானா மீண்டும் வலியுறுத்தினார். “இரவுப் பொருளாதார மேம்பாடு குறித்து யோசனை முன்வைத்த போது நான் தாக்கப்பட்டேன். இரவுப் பொருளாதாரம் என்பது விபசாரத்தை ஊக்குவிப்பது அல்லது விளம்பரப்படுத்துவது இல்லை. ஒருவர் நினைத்தால் ,ஒரு நாளின் 24 மணிநேரமும் விபசாரத்தில் ஈடுபட முடியும்” என அவர் தெரிவித்தார்.
கஞ்சா நோனாவின் பொருளாதாரக் கொள்கையை நோக்கும் போது அல்குர்ஆனில் அல்லாஹ் குறிப்பிடுவது எவ்வளவு தூரம் உண்மையாகவும் நிதர்சனமாகவும் இருக்கின்றது என்பதை நிரூபிக்கின்றது. ஸூரா நூரின் 3 வது 4 வது வசனங்கள் கூறுவது போல் விபசாரி விபசாரர்களுடனும் விபசாரன் விபசாரிகளுடனும் இருப்பான். இந்த இரு சாராரும் முமீன்களுக்கு ஹராமாக்கப்பட்டவர்கள் என்பதை எவ்வளவு நிதர்சனமாக இருக்கின்றது.
ReplyDelete